Total Pageviews

1603

Tuesday, April 7, 2009

பள்ளிக்கு செல்வோம் வாருங்கள்

பலகலை கற்போம் வாருங்கள்

அறிவை வளர்க்க பாருங்கள்

ஆழ்ந்த ஞானம் பெற்றிடுங்கள்

படிப்பும் பாட்டும் பல்கலையும்

பழகப் பழகச் சுவைத்திடுமே

இந்தப் பள்ளிப் பருவத்திலே

இனிய நற்குணங்கள் பழகிடுமே

கல்விச் செல்வம் பெற்றுவிட்டால்

கவலை இன்றி வாழ்ந்திடலாம்

கருத்தொருமித்த பயிற்சியினால்

கலங்கரை விளக்கமாய் உயர்ந்திடலாம்

எனவே

பள்ளிக்கு செல்வோம் வாருங்கள்

பலகலை கற்போம் வாருங்கள்

No comments:

Post a Comment