பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காத்து கிடந்தேனே தினமும் காத்து கிடந்தேனே
அரை மணி வந்து எனைக் கவர்ந்தாய்
அனுதினம் வந்து எனைத் தொலைத்தாய்
இந்த அலாதிக் கவர்ச்சியில் உன்னிடம் உன்னிடம்
என்னைத் தொலைத்தேனே
வேலை முடிந்ததும் என் கண்கள் உன்னை
அன்போடு பார்த்து கொஞ்சம் சிரிக்கும்
நீ சற்று கலங்கி கண்ணீர் துளி விட்டால்
என் மனம் உந்தன் பாரம் சுமக்கும்;
மின்சாரம் இன்றி சில நேரம் இருந்தால்
உனைப் பார்க்க எந்தன் கண்கள் துடிக்கும்
விளம்பர இடைவேளை நடுவிலே வந்தால்
கடுப்பாகி எந்தன் முகம் சிவக்கும்
தினந்தோறும் தொடரும் என்று முடிக்கும் உன்னை
மறுநாளும் பார்த்திட துடிப்பேன்
விடுமுறை நாட்கள் ஏன் வருகின்றதென்று
நீ வரும்வரை பார்த்து காத்திருப்பேன்
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeletetitle supera irukku.kavithaium nannathan irukku.
ReplyDelete