Total Pageviews

Monday, April 13, 2009

புத்தர் கதை

சீடர் புதிய ஆடை கேட்டார்

ஆடையைக் கொடுத்த புத்தர் ''பழைய ஆடை எங்கே '' என்றார். சீடர் '' ஆடை கிழிந்து விட்டதால் அதை ஜன்னல் திரை ஆக்கி விட்டேன்'' என்றார். புத்தர் இந்த பதிலில் திருப்தி அடையவில்லை. "பழைய ஜன்னல் திரை எங்கே'' என்றார். ''ஜன்னல் திரை கிழிந்ததால் சமயலறையில் சூடான பாத்திரங்களை பிடிக்க உபயோகிக்கிறோம்'' என்றார் சீடர். "அந்த பழைய பிடித்துணி என்னவாயிற்று" என்றார் புத்தர். "அந்த துணியில் இப்போது தரை துடைக்கிறோம்"என்றார் சீடர். "ஓஹோ! பின் அதை என்ன செய்தீர்கள்" என்றார் புத்தர். "மிகவும் நைந்து விட்ட அந்தத் துணி இப்போது உங்கள் அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் திரியாய் இருக்கிறது" என்றார் சீடர். இந்த பதிலில் மகிழ்ச்சியடைந்தார் புத்தர்.

Wednesday, April 8, 2009

பள்ளியில் கற்ற பாடல்

இந்தியாவிலே வீர மைந்தர்கள்

பிறக்க வேண்டுமே தம்பி தங்கைகள்

தெரு பெருக்கும் ஜீன்ஸ் பான்ட் போட்டா போதுமா

தெருக்குப்பை அரசியலை ஒழிக்க வேண்டாமா

தெருக்களிலே குப்பைத் தொட்டி வைக்க வேண்டாமா

தெருக்களிலே ஆட்கள் நட மாட வேண்டாமா

(ஹே இந்தியாவிலே)

சாட்டை போல பின்னல் ரெண்டு போட்டா போடுமா

நாட்டை கெடுக்கும் சக்திகளை விரட்ட வேண்டாமா

விசிலடிச்சான் குப்பைகளை விரட்ட வேண்டாமா

வீதியிலே நாலு பெண்கள் நடக்க வேண்டாமா

(ஹே இந்தியாவிலே)

Tuesday, April 7, 2009

பள்ளிக்கு செல்வோம் வாருங்கள்

பலகலை கற்போம் வாருங்கள்

அறிவை வளர்க்க பாருங்கள்

ஆழ்ந்த ஞானம் பெற்றிடுங்கள்

படிப்பும் பாட்டும் பல்கலையும்

பழகப் பழகச் சுவைத்திடுமே

இந்தப் பள்ளிப் பருவத்திலே

இனிய நற்குணங்கள் பழகிடுமே

கல்விச் செல்வம் பெற்றுவிட்டால்

கவலை இன்றி வாழ்ந்திடலாம்

கருத்தொருமித்த பயிற்சியினால்

கலங்கரை விளக்கமாய் உயர்ந்திடலாம்

எனவே

பள்ளிக்கு செல்வோம் வாருங்கள்

பலகலை கற்போம் வாருங்கள்

school



ÀûÇ¢ìÌî ¦ºø§Å¡õ Å¡Õí¸û
Àĸ¨Ä ¸ü§À¡õ Å¡Õí¸û
«È¢¨Å ÅÇ÷ì¸ô À¡Õí¸û
¬úó¾ »¡Éõ ¦ÀüÈ¢Îí¸û
ÀÊôÒõ À¡ðÎõ Àø¸¨ÄÔõ
ÀƸô ÀƸî ͨÅò¾¢Î§Á
þó¾ô ÀûÇ¢ô ÀÕÅò¾¢§Ä
þɢ ¿ü̽í¸û ÀƸ¢Î§Á
¸øÅ¢î ¦ºøÅõ ¦ÀüÚÅ¢ð¼¡ø
¸Å¨Ä þýÈ¢ Å¡ú󾢼ġõ
¸Õò¦¾¡ÕÁ¢ò¾ À¢üº¢Â¢É¡ø
¸Äí¸¨Ã Å¢Çì¸Á¡ö ¯Â÷󾢼ġõ-±É§Å
ÀûÇ¢ìÌî ¦ºø§Å¡õ Å¡Õí¸û
Àĸ¨Ä ¸ü§À¡õ Å¡Õí¸û